News August 23, 2025

மாவட்ட அளவில் எய்ட்ஸ் வினாடி வினா போட்டி

image

திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் எய்ட்ஸ் மாவட்ட கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. 26 பள்ளி ரெட்ரிப்பன் கிளப் மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவாரூர் அரசு உதவி பெறும் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாரா அக்ஷயா அணி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Similar News

News January 15, 2026

திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News January 15, 2026

திருவாரூர்: மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

image

கள்ளிக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் 65 மதிக்கதக்க மூதாட்டி மயங்கி கிடப்பதாக எடையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மூதாட்டியை மீட்டு, திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 15, 2026

திருவாரூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!