News June 19, 2024
மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு உதவித்தொகை

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவகி என்பவர், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேராத்ரோபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். எனவே அவருக்கு அறம் அறக்கட்டளை சார்பாக, போட்டியில் பங்கேற்கும் செலவினத் தொகையில் ஒரு பங்காக ரூ.10,000/ மொடக்குறிச்சி பா.ஜ.க., எம்.எல்.ஏ., சரஸ்வதி வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Similar News
News January 13, 2026
ஈரோடு: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)
News January 13, 2026
பொங்கல் பரிசு: ஈரோடு மக்களே உஷார்

ஈரோடு மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
News January 13, 2026
ஈரோடு: அவுட்டுக்காய் கடித்து குட்டி யானை உயிரிழப்பு

ஈரோடு, கடம்பூர் வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ‘அவுட்டுக்காய்’ கடித்ததில் வாய் மற்றும் தாடைப் பகுதி சிதைந்து யானை உயிரிழந்தது உறுதி செய்தனர். இது தொடர்பாக காளிமுத்து (53) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


