News March 29, 2025
மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் காலம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண அட்டைகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணையதளம் வாயிலாக இனி வரும் நாட்களில் வழங்க வேண்டியுள்ளதால், தென்காசி மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏற்கனவே பெற்றுள்ள LAL1620T சலுகை அட்டையினை 30-06-2025 வரை பயன்படுத்தி கட்டணமில்லா பயணச்சலுவையினை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் இன்று அறிவித்தார்.
Similar News
News July 11, 2025
ஆலங்குளத்தில் தேர்வு தோல்வியால் இளைஞர் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அருண் பாரத் (32). இவர் ஸ்வீட் கடை வைத்திருந்தார். இவர் சமீபத்தில் குரூப் 1 தேர்வு எழுதி இருந்தார். இதில், அவர் தேர்ச்சி பெறாததால், மனம் உடைந்து காணப்பட்ட அவர், நேற்று (ஜுலை 10) தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News July 11, 2025
தென்காசி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையானது, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வருடத்திற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில் முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.
News July 11, 2025
தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 18 அன்று காலை 10 – 2 மணி வரை நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாமில் 8ம் வகுப்பு முதல் ITI, டிப்ளமோ, டிகிரி வரை கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த <