News August 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம்கள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த முகாமானது, வரும் 23ஆம் தேதி வரை (4 நாட்கள்) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள முக்தி செயற்கை அவயவங்கள் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Similar News

News January 20, 2026

செங்கை: யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

image

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரக்ருதி என்ற யானையை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தத்தெடுத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2026

செங்கல்பட்டு: தலையில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்த நபர்

image

செங்கல்பட்டு அடுத்த சின்னமேலமையூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (26). இவர் ராட்டிணங்கிணறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றுளார். அவருக்கு பின்னால் 3 இளைஞர்கள் ஏற்கனேவே மதுபோதையில் நின்றுள்ளனர். மேலும், அஜியிடம் வீண் தகராறு செய்து பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மண்டை உடைந்து ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்த அஜய் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 20, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

image

செங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் ஜன.20 இன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் திருக்குறளை ஒப்புவித்தல் (ம) ஓவியப்போட்டி நடைபெறுகிறது. 1ம் பரிசு ரூ.5000, 2ம் பரிசு 3000, 3ம் பரிசு 2000 என 5 நபருக்கும், ஓவிய போட்டியில் 1ம் பரிசு 5000, 2ம் பரிசு 3000, 3ம் பரிசு 2000 என 3 பேருக்கு பரிசு (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். SHARE IT.

error: Content is protected !!