News August 20, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசிகளை வழங்கிய கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, கண் பார்வையற்ற மற்றும் காது கேளாதோர் என 55 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 34 ஆயிரத்து 195 மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Similar News
News January 16, 2026
கிருஷ்ணகிரி: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 16, 2026
கிருஷ்ணகிரியில் உடல் கருகி பலி!

நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலையை சேர்ந்த தம்பதி ஜெயராஜ் – மீனா (28). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையினால் மனமுடைந்த மீனா கடந்த 25-ந் தேதி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி மற்றும் புகார்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 04343-236010-ஐ அழைக்கலாம். குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


