News August 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசிகளை வழங்கிய கலெக்டர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, கண் பார்வையற்ற மற்றும் காது கேளாதோர் என 55 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 34 ஆயிரத்து 195 மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்

Similar News

News January 22, 2026

ஓசூர்: விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

image

பாகலூர், அச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மனைவி சசிகலா (27). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஜன.16-ல் வீட்டில் சசிகலா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜன.21) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

image

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே<> TN Police Citizen Services<<>> இணையதளம் அல்லது ‘Citizen’s Mobile App’ மூலம் ஆன்லைனில் எளிதாகப் புகார் அளிக்கலாம். இதில் பெறப்படும் புகார்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும். இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரின் நிலையை வீட்டிலிருந்தே கண்காணித்துத் தீர்வுகளைப் பெற முடியும். ஷேர்!

News January 22, 2026

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

கிருஷ்ணகிரி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவி ஷாலினி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என கூறப்படும் நிலையில் நேற்று (ஜன.21) வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!