News October 17, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை – கலெக்டர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி அருகே அமைந்திருக்கும் சிறுவங்கூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நாளை (அக்.17) மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று சான்றிதழ்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளுங்க!
News November 10, 2025
கள்ளக்குறிச்சி: பெண்களுக்கு முக்கியமான APP!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், அனைத்து பெண்களிடத்திலும் அரசின் ‘காவல் உதவி’செயலி இருப்பது அவசியம். இதன் மூலம், அவசர எச்சரிக்கை, இருப்பிடம் பகிர்வு, அவசர புகார் போன்றவைகளை விரைவில் செய்ய முடியும். <
News November 10, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <


