News August 9, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று பேருக்கு தலா ரூ.14500 வீதம் ரூ 34500 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
Similar News
News November 9, 2025
நாகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
நாகை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவ.10) கடைசி நாளாகும். 42 வயதுக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இதனை மீறி உரிமம் பெறாமல் செயல்படும் மறுவாழ்வு மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.


