News November 28, 2024
மாரிசெல்வராஜ் பட கதாநாயகன் தவெக வில் ஐக்கியம்

ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளம் கிராமத்தில் உள்ள 200 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை தமிழக வெற்றி கழகத்தில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர். இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான வாழை படத்தின் கதாநாயகன் பொன்வேல் என்ற சிறுவனும் இணைந்து கொண்டான். இந்த கிராமம் இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊர் ஆகும்.
Similar News
News November 15, 2025
தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொலை; 4 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
News November 15, 2025
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்கான சிறப்பு முகாம் இந்த மாதம் 15.11.2025 மற்றும் 22.11.2025 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு: வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ற்கான சிறப்பு முகாம் இந்த மாதம் 15.11.2025 மற்றும் 22.11.2025 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


