News April 6, 2024

மாமனார் தாக்கியதில் மருமகன் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் எத்திலநாயக்கன்பட்டியை   சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியை பார்ப்பதற்காக கயத்தாறு அருக வடக்கு சுப்பிரமணியபுரத்திற்கு சென்ற போது அவரது மாமனார் குருசாமி உட்பட 3 பேர் இவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கயத்தாறு போலீஸார் குருசாமி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 6, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News March 5, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் தேதி அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தலைவர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர்ல் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தலா ஒரு அமர்வு உட்பட 15 அமர்வுகளில் நடைபெற உள்ளது.

News March 5, 2026

தூத்துக்குடி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

image

தூத்துக்குடியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் சல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது <>இங்கு கிளிக்<<>> செய்து அதில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.தகவலை SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!