News August 6, 2024
மானியத் திட்டத்தின் கீழ் தொழில் மானியக் கடன்

தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், தொழில் கடன் வழங்கும் வங்கிகளுக்கு கடன் வசதிகளை ஊக்குவிக்கவும் இணை மானியத் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வரும் 14.08.2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மகளிர் திட்ட அலுவலக இரண்டாவது மாடியில் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் முகாம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சி மக்களே, தமிழக அரசு தாட்கோ மூலம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News November 12, 2025
காஞ்சிபுரத்தில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.12) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கீழம்பி, பள்ளம்பி, ஆட்டோநகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலக்கம், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என்று காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பொறியாளர் எஸ். பாண்டியராஜன் கூறியுள்ளார்.
News November 12, 2025
காஞ்சி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை கொள்ளை!

வண்டலூர், மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி பிரியா (30) தனது 9 வயது மகனுடன் கடந்த 1ம் தேதி வேலூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காஞ்சி அருகே வந்தபோது, அவரிடம் இருந்த 18 சவரன் நகை காணாமல் போயுள்ளது. பிரியா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், திருச்சியை சேர்ந்த காசி (30) என்பவரை கைது செய்தனர். அவர் வெளி சந்தையில் 18 லட்சத்துக்கு நகையை விற்றது தெரியவந்தது.


