News June 2, 2024
மாநில எல்லையில் வன சோதனை சாவடி

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் மாநில எல்லையான பாலாற்றில் வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில் சோதனை சாவடி அமைக்க ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் மாநில எல்லையான பாலாற்றில் வன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
கிளை வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வரும் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணிகள் குறித்து நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டு அறிந்தார்.
News July 9, 2025
நஞ்சை புளியம்பட்டி: வாய்க்காலில் மிதந்த தொழிலாளி சடலம்

தேவகோட்டை கண்ணாகுடி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (37). கட்டிட தொழிலாளி. இவர் பங்களாப்புதூர் அருகே நஞ்சை புளியம்பட்டியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் செல்லும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் கர்ணன் சடலமாக மிதந்தார். அவரது உடலை பங்களாப்புதூர் காவல்துறையினர் கைப்பற்றினர். சாவுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
News July 9, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பனும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஜூலை.09 ஈரோட்டில் 38.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.