News October 29, 2024
மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பாராட்டு

திருப்பூர், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இறுதி ஆண்டு மெக்கானிக் மோட்டார் வாகனம் தொழிற்பிரிவில் மாணவர் இசாக் அகமது தொழிற்பயிற்சி படிப்புக்கான தேர்வில் மொத்தமாக 1200க்கு 1168 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் கணேசன் மாணவருக்கு சான்றிதழ் வழங்கினர். மேலும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News May 8, 2025
மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.05.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், உடுமலை,பல்லடம், தாராபுரம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News May 7, 2025
திருப்பூர்: முக்கிய காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) -9498101320. ▶️திருப்பூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் – 9498104755, 0421-2970013. ▶️அவிநாசி DSP – 8300037777. ▶️பல்லடம் DSP – 8300043050. ▶️உடுமலைப்பேட்டை DSP – 8072519474. ▶️தாராபுரம் DSP – 9443808277, 04258-220325. ▶️காங்கேயம் DSP -7397027979, 04257-230883. இதை Share பண்ணுங்க.
News May 7, 2025
BREAKING: திருப்பூரில் இளம்பெண் கொலை

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.