News August 21, 2024
மாணவிகளுடன் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தார். பின்னர் அவர், மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Similar News
News November 14, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கல் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
கடலூர்: மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலி பறிப்பு

சிதம்பரம், கனக சபை நகர் முதலாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் விஜயலட்சுமி. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இன்று(நவ.13) ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அருகாமையில் வீடு வாங்கிட்டேன் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். எனக் கூறி மூதாட்டியிடம் கழுத்தில் இருந்து ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் சிவானந்தம் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 13, 2025
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


