News April 9, 2024
மாட்டுத் தொழுவமாக மாறிய நூலக கட்டடம்

திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி ஊராட்சியில் அரசு பள்ளி அருகே, உள்ள கிளை நூலகம் பழுதடைந்து காணப்பட்டது. 2022-23ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1,18,000 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த நூலகம் சீரமைக்கப்பட்டது. தற்போது கட்டடம் சீரமைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராததால் அப்பகுதிவாசிகள் நூலக வளாகத்தை மாட்டுத்தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
திருவள்ளூர்: பூட்டிய வீட்டில் அக்காள்-தங்கை பிணமாக மீட்பு

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் ராமமூர்த்தி நகரில் வசித்து வந்த வர்கள் ரமணி(50), ரேகா(43). அக்காள்-தங்கையான இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவர்கள் வசித்து வந்த வீடு 3 மாதங்களாக தீர்க்கப்படாமல் இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் நேற்று பூட்டை உடைத்து திறந்த பார்த்தபோது இருவரும் எலும்பு கூடாக கிடந்துள்ளார். சோழவரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
SUNDAY SPECIAL: திருவள்ளூர்- இங்கே போக மிஸ் பண்ணிடாதீங்க!

திருவள்ளூரில் உள்ள சிவன் கோயில்கள் பட்டியல்
▶பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
▶ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
▶கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
▶நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
▶திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
▶திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில்
▶பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில்
▶பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில்
▶மாதர்பாக்கம் அஞ்சல் காசி விஸ்வநாதர் கோயில். ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


