News November 30, 2024
மழைக்கால புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு எண்கள் 044- 27666746, 044- 27664177 எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ்அப் எண்கள் 9444317862, 9498901077 ஆகிய எண்களில் வாட்சப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (14.11.2025) இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News November 14, 2025
ஆவடி பகுதியில் மருத்துவ முகாம் அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியில் முதல்வர் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நாளை (நவ.15) பட்டாபிராம் சத்திரம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. பொதுமக்களின் நலனை முன்னிட்டு 17 துறைகளில் 43 மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. முகாம் மூலம் தேவையான சிகிச்சைகளை இலவசமாக பெற அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
News November 14, 2025
திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27667070) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


