News September 4, 2025
மருத்துவ தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: அரசு மருத்துவக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டுக்கான மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். இசிஜி, டயாலிசிஸ், சுவாச சிகிச்சை, அவசர சிகிச்சை, கார்டியாக் கேத்தரைசேஷன் லேப் உள்ளிட்ட 10 மருத்துவ தொழில்நுட்பப் பிரிவுகளில் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Similar News
News November 11, 2025
கோவை மதுவிற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமி (20), காளீஸ்வரன் (21), மற்றும் அஜித்குமார் (27) என்பவர்களே கைது செய்த அவர்களிடமிருந்து, 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
பொள்ளாச்சி அருகே விபத்து: 2 பேர் பலி

பொள்ளாச்சியைச் சேர்ந்த சதாசிவம், சூளேஸ்வரம்பட்டியைச் சேர்ந்த பரத் ஆகிய 2 பேர் ஒரே பைக்கில் வடக்கிப்பாளையத்தில் இருந்து புரவிபாளையம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் சதாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


