News August 20, 2024
மருத்துவ தரவரிசை பட்டியலில் 9ஆம் இடம் பிடித்த மாணவி

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மோகனா நீட் தேர்வில் 658 மதிப்பெண் பெற்று 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவ தரவரிசை பட்டியலில் 9ஆம் இடம் பிடித்துள்ளார். செய்யாறு அடுத்த கரிவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இவர் அரசு பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
தி.மலை: விபத்தில் வாலிபர்கள் பலி!

தி.மலை, மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) நண்பர்களான இருவரும் மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News January 13, 2026
தி.மலை: இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

வந்தவாசி, தேசூா் பச்சையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகா் (21) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாா் (25) என்பவருக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரபாகா் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 போ் பிரபாகரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தேசூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (12.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.


