News August 19, 2024
மருத்துவ தரவரிசையில் விழுப்புரம் மாணவன் முதலிடம்

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரஜனீஷ் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். அதேபோல், 2ஆவது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3ஆவது இடத்தை சென்னை மாணவி ஷைலஜா பிடித்துள்ளனர். மேலும், 7.5% அரசு இட ஒதுக்கீட்டில் சென்னை அரசுப் பள்ளியில் படித்த மாணவி ரூபா முதலிடம் பிடித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
விழுப்புரம்:காணும் பொங்கலுக்கு இன்னும் பிளான் பண்ணலையா?

விழுப்புரம் மக்களே காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு நீங்கள் குடும்பத்துடன் செல்லவேண்டிய இடங்கள் 1.திருவக்கரை தேசிய புதைபடிவ (கல்) மரப் பூங்கா – விழுப்புரம், 2.மரக்காணம் கடற்கரை, 3.ஆரோவில், 4.மயிலம் முருகன் கோவில், 5.செஞ்சிக்கோட்டை மேற்கண்ட இடங்களுக்கு சென்று காணும் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள், மேலும், இதை சேர் பண்ணுங்க!
News January 16, 2026
விழுப்புரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 16, 2026
திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜன.16 ம் தேதி திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருவாய்த்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.


