News November 19, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது
Similar News
News January 14, 2026
மயிலாடுதுறை: வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்காக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
News January 14, 2026
மயிலாடுதுறை: 1.5 கிலோ தங்கம் திருடிய சிறுவன் கைது

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் சுஹாஷ் (48) என்பவா் தங்க நகைகளை உருக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பணியாற்றிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் 1.5 கிலோ நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானாா். இதையடுத்து புகாரின் பேரில் தீவிர விசராணை மேற்கொண்ட போலீசார், தங்க நகைகளை திருடிச் சென்ற சிறுவனை வெறும் மூன்றே மணி நேரத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.
News January 14, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


