News May 14, 2024
மயிலாடுதுறை மாவட்ட தேர்ச்சி விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் ஒன் பொதுத்தேர்வில் 10,319 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,915 பேர் இன்று தேர்ச்சி பெற்றனர். மேலும் தேர்ச்சி விழுக்காடு 86.39 சதவீதம் பெற்று மாவட்ட அளவில் 35 வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83.70 சதவீதமாக இருந்த நிலையில் நிகழாண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
மயிலாடுதுறை: ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான தனிப்பிரைவு போலீசார் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரண்டு நாள்களில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
News December 10, 2025
மயிலாடுதுறை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில்,<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!
News December 10, 2025
மயிலாடுதுறையில் நாளை மின் தடை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், நீடூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட நடைபெற உள்ளது.இதனான் நாளை(டிச.11) வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி நகர், நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லுார், புத்தூர், மாதிரவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், கோவில்பத்து மற்றும் சுற்றியுள்ள பல்வேறு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்படுள்ளது.


