News October 19, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

வட தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் காற்று வீசும் என்பதாலும், மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது, என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 9, 2025
மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிணைந்து, மத்திய அரசை கண்டித்தும் எதிரான கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 9, 2025
மயிலாடுதுறை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.


