News October 10, 2025
மயிலாடுதுறை மக்களே இனி அலைச்சல் இல்லை

மயிலாடுதுறை மக்களே..உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News November 12, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், (நவ.11) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 11, 2025
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (நவ.11) நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்பட்ட இந்த வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 11, 2025
மயிலாடுதுறை வட்டத்தில் “உழவரைத் தேடி” முகாம்

மயிலாடுதுறை வட்டம் வரதம்பட்டு மற்றும் திருச்சிற்றம்பலம் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் வருகிற (நவ.14) தேதி காலை 10:30 மணிக்கு உழவர் நலத்துறை திட்டத்தின் கீழ் “உழவரை தேடி” முகாம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


