News October 12, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் போலியான தீபாவளி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள், போலி ஷாப்பிங் தளங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். எனவே அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே வாங்கவும், OTP அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான இணைப்புகளை <>cybercrime <<>>என்ற தளத்தில் புகாரளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 10, 2025

மயிலாடுதுறை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

image

வட தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் காற்று வீசும் என்பதாலும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது, என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 10, 2025

மயிலாடுதுறை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பா உள்ளிட்ட முக்கிய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால், அறிவிப்பு செய்யப்பட்ட நிவாரணத் தொகையை விரைவில் வழங்க முன்வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

News December 10, 2025

மயிலாடுதுறை: ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான தனிப்பிரைவு போலீசார் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரண்டு நாள்களில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!