News September 30, 2025
மயிலாடுதுறை: புகார் எண் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீ. ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் சம்பந்தமாக 10581 என்ற இலவச உதவி எண் அல்லது 96261-69492 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்
Similar News
News December 14, 2025
மயிலாடுதுறை: ரூ.96,210 சம்பளம்.. கூட்டுறவு வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தப் பணிகள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
News December 14, 2025
மயிலாடுதுறை: மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் சென்ற திரும்பிய கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 1.11.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொண்ட பயனாளிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


