News November 10, 2024
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வாழ்த்து

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா இன்று நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
Similar News
News November 13, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், (நவ.12) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 13, 2025
தருமபுரம் ஆதீனத்தை சந்தித்த அமைச்சர்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 25வது கயிலை குருமணிகள் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதான முன்னிலை வகித்து நடத்தி வைத்த இந்நிகழ்வில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னாள் எம்பி ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தர்மபுரம் ஆதீன குருமணிகள் மணி விழா வை ஒட்டி ஆதினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.
News November 13, 2025
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு!

தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி தேதி அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக ஆர். பூங்கொடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டு அதிகாரிக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்


