News May 16, 2024
மயிலாடுதுறை திருவெண்காடு கோயில் சிறப்புகள்!

மயிலாடுதுறையில், சைவ குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற தலமாக உள்ளது திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில். இது நவகிரகங்களில் புதன் தலமாக உள்ளது. பல தொன்மையான புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில், 1000 -2000 ஆண்டுகளுக்கும் பழமையானதாக உள்ளது. இங்கு சிவனின் 64 வடிவங்களில் 43 ஆவது வடிவமான அகோரமூர்த்தியாக காட்சித் தருகிறார். புதனை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்கள் இத்தலத்தில் வழிபடுவது வழக்கமானதாகும்.
Similar News
News November 12, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் பிரச்சனையா?

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் கடந்த அக.20-ம் தேதி ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் இரண்டு மாத பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News November 12, 2025
மயிலாடுதுறை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<


