News November 14, 2025
மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (நவ.14) காலை 9 மணி முதல் 3 மணி வரை மயிலாடுதுறை கச்சேரி சாலை யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 04364299790 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 10, 2025
மயிலாடுதுறை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

வட தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் காற்று வீசும் என்பதாலும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது, என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 10, 2025
மயிலாடுதுறை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பா உள்ளிட்ட முக்கிய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால், அறிவிப்பு செய்யப்பட்ட நிவாரணத் தொகையை விரைவில் வழங்க முன்வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
News December 10, 2025
மயிலாடுதுறை: ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான தனிப்பிரைவு போலீசார் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரண்டு நாள்களில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


