News August 7, 2025

மயிலாடுதுறை: சொந்த ஊரில் ரூ.96,395 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 33 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

மயிலாடுதுறை: பிரபல கோயிலில் திருட்டு

image

கொள்ளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புலீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் கோவிலை திறந்த போது கோயில் கருவறை முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன் சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உண்டியலை உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

News November 12, 2025

மயிலாடுதுறை: புனித யாத்திரை செல்ல மானியம்

image

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்துவ பயனாளிகளுக்கு ஜெருசலம் புனித பயண மானிய திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொண்டவர்கள் பிப்ரவரி 28-க்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 550 பயனாளிகளுக்கு ரூ.37000 மற்றும் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு ரூ. 60,000 சிறப்பு மானியம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், (நவ.11) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!