News October 18, 2025
மயிலாடுதுறை: ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கலெக்டர்

சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Similar News
News November 10, 2025
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது

சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் இருந்த ராமாயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், கக்ஷ உள்ளிட்ட 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை நாள் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News November 10, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
மயிலாடுதுறை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாப்படுகை பண்ணையார் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 210 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


