News November 26, 2025
மயிலாடுதுறை: ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ், மாவட்ட கிருத்துவ மகளிர் உதவும் சங்கத்தின் உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி நிகழ்வில் பங்கேற்றனர்
Similar News
News January 21, 2026
மயிலாடுதுறை: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வீரமணி என்பவரிடம் பணம் கேட்டு, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின்படி, பாலமுருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்ட எஸ்பி பரிந்துறையின் படி, மாவட்ட ஆட்சியர் பாலமுருகனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்திரவிட்டார்.
News January 21, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் இன்று(ஜன.21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி சித்தமல்லி, வடவஞ்சாறு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, திருச்சிற்றம்பலம், திருவாலபுத்தூர், வரதம்பட்டு , நமச்சிவாயபுரம், நாராயணமங்கலம், பாண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT
News January 21, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன.21) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்


