News April 9, 2024
மயிலாடுதுறையில் வனத்துறை தகவல்

மயிலாடுதுறையில் வனத்துறை சார்பில் இன்று சிறுத்தை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பூர் அருகே நண்டலாற்றின் அருகில்
சிறுத்தையின் எச்சம் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்பதனை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
மயிலாடுதுறை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
News December 15, 2025
மயிலாடுதுறை: தீர்த்தவாரியில் திரண்ட பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் நேற்று கார்த்திகை கடைசி ஞாயிறு கடை முக தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக குத்தாலம் பகுதியில் உள்ள 6 கோயில்களை சேர்ந்த சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி காவிரி தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
News December 15, 2025
மயிலாடுதுறை: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


