News June 17, 2024

மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம்

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டவுன் – 1 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பட்டமங்கலம் தெருவில் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நீடூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கங்கணம்புத்தூர் பகுதியில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Similar News

News January 13, 2026

மயிலாடுதுறை: உங்கள் தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா?

image

மயிலாடுதுறை மாவட்ட எம்எல்ஏ-க்களின் தொடர்பு எண்கள்
1. சீர்காழி – பன்னீர்செல்வம் (94439 21399)
2. மயிலாடுதுறை – ராஜ்குமார் (73737 06070)
3. பூம்புகார் – நிவேதா எம்.முருகன் (94433 33116)
4. இதன் மூலம் உங்கள் தொகுதி பிரச்சனைகளை உங்களது எம்எல்ஏ-விடம் நேரடியாகவே உங்களால் தெரிவிக்க முடியும். இதனை மறக்கமால் ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

மயிலாடுதுறை: வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 டூவீலர்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 58 வாகனங்கள் வரும் ஜன.21-ம் தேதி மயிலாடுதுறை டிஎஸ்பி முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 21.01.2026 அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வரும் ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்) அன்று முழுவதுமாக மூட வேண்டும் என்றும், இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!