News February 24, 2025
மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News March 8, 2026
மயிலாடுதுறை: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
மயிலாடுதுறை: அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

குத்தாலம் அ.தி.மு.க தெற்கு ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சந்திரபோஸ்வர்மா தலைமை தாங்கினார். அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன் ராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணைந்தனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம், உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.


