News April 8, 2024
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிப்பதில் தீவிரம்

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டமானது ஆறு மற்றும் ஓடை ஓரங்களில் குறிப்பாக மஞ்சளாறு , மகிமலையாறு , பழைய காவேரி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோமல், காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தையை நேரில் பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சிறுத்தையின் அடையாளம் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
மயிலாடுதுறை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

மயிலாடுதுறை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் es<
News December 5, 2025
மயிலாடுதுறை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்

சீர்காழியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (65). இவர் 18 வயது இளம் பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நீலகண்டனை கைது செய்தனர்
News December 5, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு டிச.18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


