News May 14, 2024
மயிலாடுதுறையில் கால தாமதமாக செல்லும் ரயில்

மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில் காலதாமதமாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு இதே ரயில் சற்று காலதாமதமாக காலை 9.20 மணிக்கு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு புறப்படும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.