News April 13, 2024

மயிலாடுதுறையில் காலை 10 மணிக்குள் மழை

image

மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 11, 2025

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப், மயிலாடுதுறை ஆகியவை இணைந்து நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் எதிர்வரும் 14.11.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

மயிலாடுதுறை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!