News November 18, 2024
மயிலாடுதுறையில் கடைகளுக்குள் புகுந்த மழை நீர்

மயிலாடுதுறையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கச்சேரி சாலையில் உள்ள வணிக கடைகளில் மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது. தொடர்ந்து கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

News December 6, 2025
மயிலாடுதுறை: தகராறில் காய்கறி கடை உரிமையாளர் பலி

சீர்காழி, திருப்புன்கூர் மெயின்ரோட்டில் ராஜா (52) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கடைக்கு காய்கறி வாங்க வந்த மானந்திருவாசலை சேர்ந்த சந்திரசேகர்( 49) என்பவருக்கும், ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ராஜா பலத்த காயம் ஏற்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.