News January 13, 2026
மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜன-.2) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டின் மறுவாழ்வு நிதியின் கீழ் கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய 17 நபர்களுக்கு தலா
ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதற்கான ரூ. 8,50,000 தொகைக்கான ஆணையை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 16, 2026
திருப்பத்தூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருப்பத்தூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 16, 2026
திருப்பத்தூர்: ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
News February 16, 2026
திருப்பத்தூர்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொது மக்கள் தற்போது, பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. இதனால் எப்பொழுதும் விழிப்புணர்வு உடன் இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


