News January 14, 2025
மத்தூர் அருகே சாலைவிபத்தில் ஒருவர் பலி

மத்தூர் அருகே இருளர்வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (47). இவர் மோட்டார்சைக்கிளில் வேட்டியம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை அருள் என்பவர் ஓட்டி சென்றார். இவர் பின்னால் அமர்ந்து இருந்தார். அந்தநேரம் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .
Similar News
News November 16, 2025
கிருஷ்ணகிரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

கிருஷ்ணகிரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் குடிதண்ணீர் நிறுத்தம்

கிருஷ்ணகிரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில், புதிய வால்வுகளை பொருத்தும் பணி நடைபெறவுள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18.11.2025, 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய மூன்று நாட்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது என இன்று தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் வெ. கோவிந்தப்பன் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <


