News August 21, 2024
மத்திய கூட்டுறவு வங்கி 3வது நிர்வாக குழு கூட்டம்

நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் மூன்றாவது நிர்வாக குழு கூட்டம், மத்திய கூட்டுறவு வங்கியின் வட்டார அலுவலகத்தில் நேற்று எம்பி ராஜேஷ்குமார்
தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ப.அருளரசு முன்னிலையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மண்டல துணை பதிவாளர் ஜேசுதாஸ், திருச்செங்கோடு துணை பதிவாளர் நாகராஜன் மற்றும் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 22, 2026
ரேஷன் கார்டு குறித்து நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வரும் ஜனவரி 24-ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். புதிய அட்டை கோருவோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
நாமக்கல்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
நாமக்கல்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


