News July 5, 2025
மது விற்பனையை தடை செய்த கிராமம்

வடக்கனந்தல் அருகே ச.செல்லம்பட்டு கிராமத்தில் மது விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட ஊராட்சி எனவும் பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றச் செயலாகும் என ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பலரும் தற்போது இதை பாராட்டி வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கள்ளச்சந்தையில் மது விற்ற நபர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்வதாக இன்று (நவ.7) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் நேரடியாக சென்று விசாரணை செய்த போது, 35 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றியதுடன், அரிகிருஷ்ணனை கைது செய்யப்பட்டார்.
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.7) இரவு முதல் நாளை (நவ.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


