News November 25, 2025

மதுரை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

image

மதுரை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 17, 2026

மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின்..

image

அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை திறந்து வைக்க சாலை மார்க்கமாக செல்கிறார். பின் மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானநிலையம் வந்து அங்கிருந்து சென்னை செல்கிறார்.

News January 17, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (16.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 16, 2026

BREAKING: பாலமேடு ஜல்லிக்கட்டு வெற்றி வீரர் இவர் தான்!

image

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. தற்போது முதல் பரிசுக்கு அஜித் தேர்ந்தெடுக்கப்பட்டு காரினை வென்றுள்ளார். பிரபாகரன் 2ம் பரிசு பைக்கினை வென்றுள்ளார்.

error: Content is protected !!