News November 14, 2025

மதுரை: லாரி சக்­கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி

image

மதுரை சிந்­தா­மணியை சேர்ந்­தவர் முருகன் மகன் சங்­க­ர­பாண்டி(11) 6ம் வகுப்பு படித்து வந்­தார். அருப்புக்­கோட்டை ரிங் ரோட்டில் இன்று சைக்­கிளில் வீடு திரும்பி கொண்­டிருந்­த போது சிந்­தா­மணி சந்திப்­பருகே வந்த லாரி மாணவன் மீது மோதியது. இதில் தலையில் சக்­க­ரம் ஏறியதில் சம்­பவ இடத்தி­லேயே சிறுவன் உயிர் இழந்­தார். போக்­கு­வரத்து புல­னாய்வு பிரிவு
போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 12, 2025

மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறப்பு மாற்றம்

image

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி திருப்பள்ளியெழுச்சியை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும் பிறகு 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 12, 2025

மதுரை: சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் பரிதாப பலி

image

மதுரை உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் செல்வபாண்டி, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், நேற்று (டிச. 11) மாலை மைத்துனர் அருண்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உசிலம்பட்டி போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

News December 12, 2025

மதுரை: ரேஷன் கார்டு இருக்கா…. முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (13.12.25) நடக்கிறது. குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர்,முகவரி திருத்தம், போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!