News November 25, 2025
மதுரை: மீன் பிடிக்க சென்ற முதியவர் பரிதாப பலி

மதுரை சிலையனேரி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாசானம் மகன் முத்து இருள்(60). இவா், அதே பகுதியில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கண்மாய் நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 24, 2026
மதுரை : 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மதுரை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
மதுரை: மகன் கண்முன்னே தாய் பலியான சோகம்.!

திருப்பரங்குன்றம் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி . நேற்று இவரது மகன் கொப்பையன் டூவீலரில் பின்னால் அமர்ந்து திருமங்கலம் சாலையில் சென்றுள்ளார். அப்போது கற்பகநகர் வேகத் தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது, மீனாட்சி தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.
News January 24, 2026
மதுரையில் முறைகேடுகளுக்கு ‘ஆப்பு’ ..!

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் உள்ள 16 வார்டுகளில், 45,000-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு முகாம் நடத்த ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் முகாம்கள் நடைபெற்றது. விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்திய அன்றே இணைப்பு வழங்கப்படுவதால், இணைப்புகளுக்கு பல ஆயிரம் கூடுதல் வசூல் தடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


