News August 24, 2025

மதுரை: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க?

image

மதுரை மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், அதன் Bill-யை வைத்து சட்டப்படி மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் இழப்பீடு பெற முடியும். அல்லது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரியை (94450-00335) அணுகலாம். SHARE பண்ணவும்

Similar News

News January 23, 2026

மதுரை: சிறுமியை திருமணம் செய்த கணவர் கைது

image

மதுரை, வண்­டி­யூர் யாகப்­பா நகரை சேர்ந்­த­ வினோத்­கு­மார் (32). சிறுமி ஒரு­வரை திரு­ம­ணம் செய்து குடும்­பம் நடத்­தி­ வந்துள்ளார். இதில் சிறு­மி கர்ப்பமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். இந்த தக­வல் கிழக்கு ஒன்­றிய ஊர்­நல அலு­வ­லர் அமு­தாவுக்கு தெரியவர அவர்­ அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் புகார் செய்ய, போலீ­சார் போக்சோ சட்டத்தில் வினோத்­தை நேற்று கைது செய்தனர்.

News January 22, 2026

மதுரை: 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்

image

மதுரை கோ.புதூரை சேர்ந்­த­ வேல்முரு­கன் மகன் பாரத் (20), 17 வயது சிறு­மியை ரக­சியமாக திரும­ணம் செய்து கொண்­டார். சிறுமிக்கு உடல் நலக்­கு­றைவு ஏற்­பட்டு அவர் கோ.புதூர் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்கு அழைத்து சென்­ற போது சிறுமி 5 மாத கர்ப்­ப­ம் என தெரிந்­தது. மதுரை மேற்கு ஊர் நல அலுவலர் பாலஜோ­தி காவல் நிலை­யத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்­டத்தில் பாரத்தை இன்று கைது செய்தனர்.

News January 22, 2026

மதுரையில் ஒர் நாள் வேலை நிறுத்தம்

image

தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பிப்.12 அன்று மதுரையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.22-இல் மதுரையில் நடந்தது. இச்சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.

error: Content is protected !!