News November 19, 2024
மதுரை சிறைக்கு 89 ஏக்கரில் செம்பூரில் இடம் தேர்வு

மதுரை மத்திய சிறை 1875ஆம் ஆண்டு, 31 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இட நெருக்கடியான இச்சிறையில் தற்போது 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை புறநகர் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 89 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
மதுரை: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

மதுரை மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் இங்கு <
News December 16, 2025
மதுரை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரை பெருக்கும் வகையில், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதன் தாக்கம் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.அப்பகுதி மக்களுக்கு SHARE செய்யவும்.
News December 16, 2025
மதுரையில் பல இடங்களில் மின்தடை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ்நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு (எம்.எச்.டி.ஆர்.எச். பிளாக்), TNSTC குடியிருப்பு (A முதல் H பிளாக்), போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், மகபூப்பாளையம் மேலும் பல இடங்களை அரிய<


