News November 25, 2025
மதுரை: கிரிக்கெட் விளையாடிய இளைஞர் திடீர் இறப்பு

மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன், 26. குளிர்பான நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேன். நேற்று முன்தினம் அதிகாலையிலேயே ரிங் ரோடு மண்டேலா நகர் அருகே கிரிக்கெட் விளையாட சென்றார். காலை 11:30 மணிக்கு அவரது தாய் போனில் பேசியுள்ளார். பகல் 2:00 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணுவர்தன், சோர்வாகி தண்ணீர் கேட்ட நிலையில் மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 21, 2026
மதுரை: சாலை விபத்தில் இளைஞர் பரிதாப பலி..!

திருவாதவூர் அருகே உள்ள பனங்காடியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மணிகண்டன்(21). நேற்று முன்தினம் மாலை இவர் டூவீலரில் மேலூர் மேலவளவு சாலையில் அதிவேகமாக சென்ற போது, சுக்காம்பட்டி அருகே வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை..!

மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரிட்டாபட்டி, குன்னத்தூர், திருவாதவூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். SHARE IT..
News January 21, 2026
சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேருக்கே அனுமதி!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது, இது இடைக்கால உத்தரவு; மலை உச்சியில் விழாவில் கலந்து கொள்ளும் கணக்கை காவல்துறை மற்றும் தொல்லியல் துறை முடிவு செய்யலாம்.


