News August 23, 2024
மதுரை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் (TIIC) மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 2024 ஆக.06. வரை நடைபெறுகிறது. இதில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25%, 35% முதலீட்டு மானியமாக அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
மதுரை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

மதுரை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <
News November 11, 2025
மதுரை மகளிர் காவல்நிலையம் முற்றுகை

மதுரை வசந்தநகர் அரசு உதவி பெறும் பள்ளி பாலியல் தொந்தரவு வழக்கில், ஆசிரியர் ஜெயராம் மற்றும் உடந்தையாக இருந்த தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது நவம்பர் 5-ல் ‘போக்சோ’ சட்டம் பதியப்பட்டது. கைது செய்யாததால், நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News November 11, 2025
மதுரையில் இந்த பகுதிகளிலும் இன்று கரண்ட் கட்

மதுரை மாவட்டம், மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவிநகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமசிவாய நகர், ஐஸ்வர்யா நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், சத்தியமூர்த்தி நகர், அருள் நகர், அவர்லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் மேலும் அவனியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மற்றும் விமானநிலையம் வரை இன்று மின் தடை.


