News May 14, 2024
மதுரை அருகே வெளுத்து வாங்கிய மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது பேரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது . இதனால் அப்பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது.
Similar News
News December 5, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் நாளை காலை காலை 9 முதல் மதியம் 3 மணி வரை விஸ்வநாதபுரம், மகாத்மாகாந்தி நகர், முல்லைநகர், சிவக்காடு, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, கருமாத்துார், மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி,கோவிலாங்குளம், வடபழஞ்சி தென்பழஞ்சி, பல்கலை நகர்.மற்றும் இதன் சுற்று பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 4, 2025
BREAKING திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தாமதம்.!

திருப்பரங்குன்றத்தில் இரவு 7மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றுவதற்காக அங்கு திரண்டுள்ள இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை அனுமதிக்காமல், கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தீபம் ஏற்றப்படுமா.? இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இரவு 10:30க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
BIG BREAKING: சற்று நேரத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபத்தூணில் விளக்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது சற்று நேரத்தில் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்பட உள்ளது.


